விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :4174 days ago
நாமக்கல்: நாமக்கல் அடுத்த அணியார், பெருக்காம்பாளையம் விநாயகர், ஓங்காளியம்மன், காளியம்மன் கோவில், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பரிவார ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை பாலு குருக்கள் நடத்தினார். அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, தர்மகர்த்தா மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.