சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :4161 days ago
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை அப்பு செட்டி தெருவில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில், நேற்று காலை, 5 மணி முதல், மஹா கும்ப ஸ்தாபனம் அர்ச்சனை நிகழ்ச்சி நடந்தது. ஜப பாராயணம், அக்னி பிரதிஷ்டை, மூர்த்தி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. காலை, 7.30 மணிக்கு, மஹா பூர்ணாஹுதி, க்ரஹப்ரீதி, யாத்ராணம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை, 7.40 மணியில் இருந்து, 8 மணி வரை, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.