அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்!
ADDED :4219 days ago
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிர÷ மாற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா வந்தது. கடந்த 10ம் தேதி திருத்தேரோட்டமும் அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி உற்வசம் நடந்தது. விழாவின் 11ம் நாள் விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகமும், சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடந்தது. அதைத்தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், மகாதீபாராதனையும் நடந்தது. செங்குந்தர் முத லியார் வகையறாவினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது. நாகராஜ், ÷ சாமு குருக்கள் பூஜைகளை செய்தனர்.