உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமிநாதீஸ்வரர் கோவில் முதலாண்டு விழா!

பூமிநாதீஸ்வரர் கோவில் முதலாண்டு விழா!

ஊத்துக்கோட்டை: தும்பாக்கம் பூமிநாதீஸ்வரர் கோவில் முதலாண்டு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.  ஊத்துக்கோட்டை அடுத்த, தும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது பூமிநாதீஸ்வரர் கோவில். சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில் சீரமைக்கப் பட்டு, கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதலாண்டு விழாவை ஒட்டி, சுவாமிக்கு காலை பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகம்  நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இரவில், திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில், தும்பாக்கம் மற்றும்  சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !