உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோவில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா!

செஞ்சி கோவில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா!

செஞ்சி: செஞ்சி பி. ஏரிக்கரை மீதுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 11ம் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மறுநாள்  இரவு 9 மணிக்கு ஆடி கிருத்திகை திரு விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது.  அன்று மாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய் தனர். கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கொடிமரத்திற்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்து கொடியேற்றினர்.  காப்பு கட்டி  ஆடி கிருத்திகை விழா துவங்கியது.  விழா குழுவினர் அரங்க ஏழுமலை, சிவக்குமார், மதியழகன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆடி கிருத்திகை முக்கிய விழாவாக இம்மாதம் 21ம் தேதி சாமி வீதி உலாவும், 22ம் தேதி தேர் இழுத்தல், செடல் போடுதல், தீமிதித்தல் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !