காளியம்மன் கோவிலில் செடல் திருவிழா!
ADDED :4108 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கட்டுக்கரையில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செ< லுத்தினர். சேத்தியாத்தோப்பு கட்டுக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் 21ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து பத்து தினங்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடந்தது. நேற்று முன் தினம் அதிகாலை காத்தவராயன் கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும், மாலையில் ராஜன் வாய்க்கால் கரையில் சக்தி கரக அலங்கார பூஜையை தொடர்ந்து பக்தர்கள் செடல் அணிந்தும், பால் குடம் ”மந்தும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.