கருவறையின் கோபுரத்தை விமானம் என்று சொல்வது ஏன்?
ADDED :4112 days ago
விமானம் என்ற சொல்லை வி+மானம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். அதாவது ‘அளவு கடந்தது’ என்று பொருள். கருவறையின் மேல் கூரை யாக இருந்து அதிலுள்ள கலசத்தின் மூலம் தெய்வ சக்தியை உட்புகுத்தும் பேராற்றல் உடையதாக இருப்பதாலும், அளவு கடந்த மகிமையை உடை யது என்பதாலும் விமானம் என குறிப்பிடுகிறோம். அளவு கடந்த உயரத்தில் செல்வதால் தான், ‘ஏரோபிளேனையும்’ விமானம் என்று சொல்கிறோம்.