ஆனந்த சாய்பாபா கோவில் முதலாமாண்டு விழா!
உடுமலை: உடுமலை, தில்லை நகரில் உள்ள ஷீரடி ஆனந்த சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் கோவிலின் முதலாமாண்டு விழா, நடந்தது. விழா கடந்த 11ம் தேதி காலை 7.00 மணிக்கு, மங்கள இசை, கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம் மற்றும் சுதர்சன ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு, பூஜைகள், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. 12ம் தேதி காலை 8.00 மணிக்கு, சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. சாய் சத்சரித பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணத்தை தொடர்ந்து, குருபூர்ணிமா விழா இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் காலை 8.30 மணிக்கு, 108 சங்காபிேஷகம், தீபாராதனையும், காலை 10.00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணமும், மாலை 4.00 மணிக்கு சத்யசாய் பஜன், சிலம்பாட்டம் மற்றும் தேவராட்டத்துடன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, சுவாமி வீதியுலாவும் நடந்தன; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கோவில் முதலாமாண்டு விழா முன்னிட்டு, நேற்றுமுன்தினம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப் புகளில் அதிக மதிப்பெண் பெற்ற, உடுமலை அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஷீரடி ஸ்ரீ ஆனந்தசாயி அறக்கட்டளை சார்பில், ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.