குதிரை வாகனத்தில் நாராயண பெருமாள் உலா!
ADDED :4105 days ago
ஆர்.கே.பேட்டை: பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று முன்தினம், நாராயண பெருமாள், குதிரை வாகனத்தில் உலா வந்தார். ஆர்.கேபேட்டை அடுத்த, வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில், ஆனி பிரம்மோற்சவம், கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அனுமந்தன், சேஷ வாகனம், யானை, கருடன் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அ ருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு, குதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை 10:00 மணியளவில், சுவாமிக்கு தீர்த்தவாரியும், மாலை 6:00 மணியள வில்கலசாபிஷேகமும் நடந்தது. ஒரு வார கால பிரம்மோற் சவ விழா, நேற்றுடன் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை, திருத்தணி முருகன் கோவில் தேவஸ்தானம் செய்திருந்தது.