உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா!

புதுச்சேரி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா!

புதுச்சேரி: சுதானா நகரிலுள்ள செல்வ விநாயகர் கோவிலின் 6ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. நயினார்மண்டபம், சுதானா நகரிலுள்ள செல்வ  விநாயகர் கோவிலின் 6ம் ஆண்டு நிறைவு விழா மற்றும்  செல்வாம்பிகை சமேத செல்வபுரீஸ்வரர், ஆதி விநாயகர், சண்டிகேஸ்வரர், கால பைரவர்  ஆகிய மூர்த்திகளுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9.45 மணிக்கு , மூன்று மூ ர்த்திகளுக்கும், மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், முதலியார்பேட்டை எம்.எல்.ஏ.,பாஸ்கர் முன்னிலையில் கும்பாபிஷேகம்  நடந்தது. பக்தர்களுக்கு, தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில்  நிர்வாகக்குழுவினர், திருப்பணிக் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !