கேதார்நாத்தில் பலத்த மழை: 2,000 பக்தர்கள் தவிப்பு!
ADDED :4104 days ago
டேராடூன்: உத்தரகண்ட மாநிலம் கேதார்நாத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பக்தர்கள் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பலத்த மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளதால், யாத்திரை மேற்கொண்டுள்ள, 2,000க்கும் அதிகமான பக்தர்கள், பாதி வழியில் தேங்கியுள்ளனர். அவர்களுக்கு தற்காலிக குடில்கள், உணவு ஆகிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.