உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நெய்க்காரப்பட்டி; பழநி,நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்தூரில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


பழநி, நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்தூரில் வள்ளுவர் வீதியில் திருவள்ளுவர் கோயில் உள்ளது. 60 ஆண்டுகளாக கோயிலில் திருவள்ளுவர் தினத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோவிலில் தினமும் குழந்தைகள் திருக்குறள் படித்து வருகின்றனர். இன்று திருக்குறளைப் படித்து திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !