மொரட்டாண்டி கோவிலில் மாட்டு பொங்கல் சிறப்பு பூஜை
ADDED :5 hours ago
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மாட்டு பொங்கலையொட்டி, மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 40 பசுக்களுக்கு கோ பூஜை, லட்சுமி பூஜை மற்றும் குபேர பூஜை சிதம்பர குருக்கள் தலைமையில் நடந்தது. சிறப்பு பூஜையில், கீதா சங்கர குருக்கள், தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் சாய்பாபா, துரை, ரமேஷ், அசோக், மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.