காரைக்குடி வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்!
ADDED :4105 days ago
காரைக்குடி : சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் விழா, கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி வீதி உலா,தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை 4.20 மணிக்கு தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், இரண்டாவது வீரசேகர உமையாம்பிகை தேரும், மூன்றாவது அம்பாள் தேரும் அணி வகுக்க, தேர் நான்கு ரத வீதி வழியாக, மாலை 5.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.