தீவனூர் பெருமாள் கோவிலில் திருவோண தீபம்!
ADDED :4106 days ago
திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் ÷ காவிலில் நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு, கோவில் எதிரே ஆஞ்சனேயர் சன்னதி அருகில் உள்ள கல் ஸ்தூபியின் உச்சியில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.