உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோவில் நாளை கொடிமரம் பிரதிஷ்டை!

சுந்தரராஜ பெருமாள் கோவில் நாளை கொடிமரம் பிரதிஷ்டை!

ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை நாளை காலை நடக்கிறது. ஆர்.கே.பேட்டை, பிராமணர் வீதியில், சுந் தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு புதிய கொடிமரம் பிரதிஷ்டை நிர்மாணம் செய்யும் பணி  நடந்து வருகிறது. நாளை காலை 6:00 மணிக்கு, 36 அடி உயரம் கொண்ட கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கிறது.  இதையொட்டி, இன்று மாலை 6:00 மணிக்கு, யாகசாலை பூஜை மற்றும் பிரவேச சாந்தி செய்யப்படுகிறது. நாளை காலை 11:00 மணிக்கு உற்சவரு க்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு திருகல்யாண உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !