ஆட்சிக்காடில் கும்பாபிஷேக விழா
ADDED :4104 days ago
மரக்காணம்: மரக்காணம் ஒன்றியம் ஆட்சிக்காடுகிராமத்தில் தண்டுமாரியம்மன் கோவிலில் பாலகணபதி, பால முருகன், துர்க்கை, நவகிரகங்கள், சப்தமாதர்கள், ராதா, ருக்மணி, வேணுகோபால் சுவாமிக்கும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தது. கடந்த 12ம் தேதி காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜையுடன் துவங்கியது.13ம் தேதி காலை 8 மணிக்கு யாக சாலை நிர்மாணம், பிம்பசுத்தி, இரவு 7 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு யாக சாலை பூஜையும் அதை தொடர்ந்து 9 மணிக்கு ராஜகோபுர கலசத்திற்கும், மூலவர் விமான கலசத்திற்கும் புதுச்சேரி சிதம்பர குருகள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.