உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னாக்குடி கோயிலில் கும்பாபிஷேகம்

பொன்னாக்குடி கோயிலில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி : நெல்லையை அடுத்துள்ள பொன்னாக்குடியில் உண்ணாமுலையம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் -கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. நெல்லை-நாகர்கோவில் ரோட்டில் உள்ளது பொன்னாக்குடி. இங்குள்ள உண்ணாமுலையம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோயில் பழமையானது. இங்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத் துடன் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையும், சிறப்பு தீபாராதனையும், 9 மணிக்கு மேல் விமான கோபுரம் மற்றும் சுவாமி, அம்பாள், பைரவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள்கலந்துகொண்டனர். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !