உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு 3 நாளில் ரூ. 4 கோடி நன்கொடை!

ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு 3 நாளில் ரூ. 4 கோடி நன்கொடை!

ஷீரடி : குரு பூர்ணிமாவையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலில், 3 நாட்களில் மட்டும் ரூ.4.47 கோடி அளவிற்கு  நன்கொடைகள் பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக, ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் தலைமை கணக்கு  அலுவலர் திலீப் ஜிர்பி கூறியதாவது, குரு பூர்ணிமா விழா, சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில், கோவிலில்  பக்தர்களின் கூட்டம் கணிசமான அளவில் இருந்தது. 3 நாட்களில் மட்டும் ரூ.4.47 கோடி அளவிற்கு நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது.  நன்கொடைப் பெட்டியில் இருந்து, ரூ. 3.10 கோடி மதிப்பிலான தங்கம் வெள்ளி நகைகளும், ரூ. 1.46 கோடி அளவிற்கு பணமும்  நன்கொடையாக கிடைத்துள்ளன. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில், ரூ. 38 லட்சம் அளவிற்கே நன்கொடைகள் பதிவாகியிருந்தது.  இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !