உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவராகசுவாமி கோவில் உண்டியல் திறப்பு!

பூவராகசுவாமி கோவில் உண்டியல் திறப்பு!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் உண்டியல் திறக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையில் மீண்டும் உண்டியல் திறக்கப்பட்டது. அதையடுத்து, உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 754 ரூபாய் பக்தர்கள் காணிக்கை இருந்தது. தக்கார்  சிவஞானம், செயல் அலுவலர் முருகன்,  கணக்கர் வீரராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !