செஞ்சி மண்டலாபிஷேக நிறைவு விழா!
ADDED :4153 days ago
செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவிலில், 3 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து கடந்த ஜூன் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவாக 19ம் தேதி கலச பிரதிஷ்டை செய்து, யாகசாலை பூஜைகள் நடந்தன. மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் சாமி வீதியுலா நடந்தது.