செல்லியம்மன் கோவிலில் ஆடி விழா!
ADDED :4153 days ago
மாதவரம், லட்சுமிபுரத்தில், ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு, செல்லியம்மன் கோவிலில்
பாலாபிஷேக விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், மாட்டு வண்டியில் வீதி உலா வந்து,
பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். இதனை முன்னிட்டு, ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்து,
அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.