விருத்தாசலம் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு!
ADDED :4425 days ago
விருத்தாசலம்: ஆடி கிருத்திகையையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் மணவாளநல்லுõர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், 6:00 மணிக்கு வெள்ளித் தேரில் கொளஞ்சியப்பர் உற்சவர் உட்பிரகார வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி, கருவேப்பிலங்குறிச்சி சாலை வேடப்பர் சுவாமி கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆலிச்சிகுடி சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு நுõற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், மயில் காவடி, தாள் காவடி சுமந்து மணிமுக்தாற்றிலிருந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.