உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோழியனூரில் 25ம் தேதி தீமிதி விழா!

மோழியனூரில் 25ம் தேதி தீமிதி விழா!

மயிலம்: மோழியனூர் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன்  ஆடித்திருவிழா துவங்கியது. காலை 9 மணிக்கு  அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, இரவு 7 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினசரி மாலை 4 மணிக்கு பாரத சொற்பொழிவு நடக்கிறது.  நேற்று முன்தினம் 6ம் நாள் உற்சவத்தில் அர்ச்சுனன், திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வரும் 25ம்தேதி காலை மாடு விரட்டும், பி ற்பகல் 12 மணிக்கு அரவான் கடபலி நிகழ்ச்சியும், 2 மணிக்கு துரியோதனன் படுகளமும், மாலை 6 மணிக்கு  தீமிதி உற்சவம், இரவு அம்மன்  வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !