சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை!
ADDED :4202 days ago
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அர்ச்சனை, தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வள்ளி, தேவசேனா சமேதராய் சுப்ரமணியர்சுவாமி மின்விளக்கு அலங்காரத்துடன் இரவு திருவீதியுலா நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகள் அறங்காவலர் குழு தலைவர் வைத்தியநாதன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, பிச்சாண்டிபிள்ளை, வெங்கடாசலம், நல்லாபிள்ளை, அபரஞ்சி, மோகன், சீனுநரசிம்மன், சங்கர் உள்பட கட்டளைதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.