விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன்!
ADDED :4191 days ago
விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என விநாயக புராணம் கூறுகிறது. மகப்பேறு பெறமருத இலை, எதிரிகள் தரும் துன்பம் தொலைய அரசஇலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை. சவுபாக்கியமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ்பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல், செம்பருத்தி, எருக்கம்பூ, மாவிலை கொண்டும் அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒரு சேர அடையலாம்.