உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நாளை ஐந்து கருடசேவை!

ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நாளை ஐந்து கருடசேவை!

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில், நாளை, ஐந்து கருட சேவை நடக்கிறது. இக்கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா, ஜூலை 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. 5ம் நாளான நாளை (ஜூலை26) காலை 9 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் வடபத்ரசாயி, சுந்தரராஜ பெருமாள், திருவேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார் , வடபத்ரசாயி, சுந்தரராஜ பெருமாள், வேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறியஅன்ன வாகனத்திலும், வீதியுலா வரும் கருடசேவை நடக்கிறது. இதில், விருதுநகர், மதுரை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் உட்பட பல ஊர்களிலிருந்தும் வரும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 30ல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன்,செயல் அலுவலர் ராமராஜா செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !