உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாரண்யம் பகுதியில் ஆடி கிருத்திகை விழா

வேதாரண்யம் பகுதியில் ஆடி கிருத்திகை விழா

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் உள்ள வேதாரண்யேஸ்வரர் ஸ்வாமி திருக்கோவிலில், ஆறுமுக ஸ்வாமிக்கு ஆடி கிருத்திகையையொட்டி, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. காடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய ஸ்வாமி, தோப்புத்துறை கைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள முருகன் கோவில், ஆறுகாட்டுத்துறை கற்பக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகன் கோவில்களில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு, சிறப்பு அபிஷே ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !