செஞ்சி பச்சையம்மன் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு
செஞ்சி : செஞ்சி பச்சையம்மன் கோவிலுக்கு செல்வதற்கு ஆடி வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. செஞ்சி வனச்சரகர் பெருமாள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: செஞ்சி வனச்சரகத்தில் உள்ள சிறுவாடி காப்பு காட்டில் உள்ள மன்னார் சாமி பச்சையம்மன் கோவிலுக்கு பாத்திரம் மற்றும் பண்டங்கள் கொண்டு வரும் வாகனங்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வரும் வாகனங்கள் கோவிலுக்கு செல்லும் வனப்பாதையில் அனுமதிக்க வேண்டும்.வாடகை டெம்போ, லாரி போன்ற கனரக வாகனங்கள் காட்டு பாதையில் அனுமதி கிடையாது. காட்டினில் பக்தர்களால் போடப்படும் கழிவுகளை கோவில் நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த உத்தரவு இந்தாண்டு ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பொருந்தும். மற்ற நாட்களில் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.