கரூர் வேம்பு மாரியம்மனுக்கு 30 லட்சம் ரூபாய் நோட்டில் அலங்காரம்!
கரூர்: ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, 30 லட்சம் ரூபாய் நோட்டுகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.கரூர் பசுபதிபுரத்தில், வேம்பு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.முதல் வெள்ளியன்று அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், இரண்டாம் வெள்ளிக்கிழமையான நேற்று, ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து, 30 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 500 ரூபாய் மற்றும், 1000 ரூபாய், புதியது கரன்ஸி நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டன. சிறப்பு பூஜைக்கு பிறகு, பொதுமக்களிடம் மீண்டும் ரூபாய் நோட்டு ஒப்படைக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.