உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதாமூர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

பூதாமூர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

விருத்தாசலம்: பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. கடந்த 20ம் தேதி கொடியேற்றி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் செடல் திருவிழா துவங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.ஆறாம் நாள் உற்சவமாக நேற்று திருவிளக்கு பூஜையையொட்டி, மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் 250 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். இரவு புஷ்ப பல்லக்கில் செங்கழனி மாரியம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !