உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி நிறைவு விழா!

காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி நிறைவு விழா!

காரைக்குடி : காரைக்குடியில், திருவையாறு இசை நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. காரைக்குடி தமிழ் இசை சங்கம், மியூசிக் அகாடமி சார்பில், காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி, ராமநவமி மண்டபத்தில் கடந்த 25-ம் தேதி டி.கே.ரமணன் குழுவினரின், நாதஸ்வர நிகழ்ச்சியுடன் துவங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியில் சங்கீத ரத்னாகர நாராயணன் இன்னிசை, 2ம் நாளில் காரைக்குடி இசைகலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.நிறைவு விழா: நிறைவு நாளான நேற்று காலை 8 முதல் 9 மணி வரை தியாகராஜர் பூஜை நடந்தது. தொடர்ந்து காலை மோகன் வைத்யா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சங்கரய்யர், சுப்ரமண்யம், நீலாயதாட்சி, ராதாராமகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், அரவிந்த மற்றும் இசைகலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடந்தது. தொடர்ந்து செல்வி ஐஸ்வர்யா,பைரவியின் வயலின், கோபிசெட்டிபாளையம் கமலா நாராயணி, திருச்சூர் பார்வதி விஸ்வநாத், சங்கீத அருணபாரதி கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தது. தமிழிசை சங்க இணை செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மியூசிக் அகாடமி தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். தமிழிசை சங்க தலைவர் சொக்கலிங்கம் பேசினார். இயல், இசை நாடக மன்ற செயலாளர் சச்சு விருது வழங்கினார். தமிழிசை சங்க செயலாளர் சுந்தர்ராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !