வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4424 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம். தீபாரதனை நடந்தது.ருக்மணி சத்யபாமா சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.