வருண பகவானுக்கு பொங்கல்!
ADDED :4089 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், நேற்று முன்தினம், மழை வேண்டி, வருண பகவானுக்கு பொங்கல் வைத்து, பகுதிவாசிகள் வழிபட்டனர். ஸ்ரீபெரும்புதுாரில், 370 ஏக்கர் பரப்பளவில், பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம், 1,240 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. மழை இல்லாததால், ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், மழை வேண்டி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த, தாந்தோன்றி அம்மன் கோவில் தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு பகுதிவாசிகள், ஊரணி பொங்கல் வைத்து, வருண பகவானை வழிபட்டனர். இப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில் ஏரியில், ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். மாலையில், வருண பகவானை வேண்டி, படையல் போட்டு வழிபட்டனர்.