ராமேஸ்வரத்தில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4088 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், ஆடி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆடி திருக்கல்யாண விழாவின் ஒன்பதாம் நாளான இன்று (ஜூலை 29ல்) ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காலை 10.40 மணிக்கு, பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி உட்பட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வந்த தேர், பின்னர் நிலையை அடைந்தது.