உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம் !

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம் !

அறந்தாங்கி நகரில் வீர மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த 22–ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அம்மனுக்கு மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.தேரோட்டம்திருவிழாவின் முக்கிய  நிகழ்ச்சியான  தேரோட்டம் நேற்று முன்தினம் நடை பெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங் காரத்தில் வீரமாகாளியம்மன் எழுந்தருள, கருப்பர் மாட்டு வண்டியில் வழிகாட்டி செல்ல, பாலைவனம் ஜமீன்தாரும், முன்னாள் தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை இணை இயக்குனருமான துரை.தாமரைச்செல்வம் தேர்வடம் தொட்டு, தேரோட் டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் கோவிலில் 4 வீதிக ளிலும் உலா வந்தது. தேர் சென்ற வழி நெடுகிலும் பக்தர் கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேரோட்டத்தின் முதல் நாளான நேற்று தேர் ராஜேந் திரசோழீஸ்வரர் அய்யப்பன் கோவில் அருகே நிறுத்தப் பட்டது. இதையடுத்து நேற்று மாலையில் மீண்டும் தேர் புறப்பட்டு நிலையை அடைந் தது. வீர மாகாளி யம்மன் கோவில் தேரோட் டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணி யில் அறந் தாங்கி போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !