பெங்களூருவில் கங்கம்மாதேவி கோயில் பால்குட ஊர்வலம்!
ADDED :4390 days ago
பெங்களூரு ராஜாஜிநகர் சங்கரமடாவில் உள்ள கங்கம்மாதேவி கோயிலின் 32-வது ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து வியாழக்கிழமை அம்மனுக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்குபால்குடம் எடுத்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.5 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை அம்மனுக்கு கணபதி ஹோம பூஜைகள் நடைபெறுகிறது.வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை பாதாள பஞ்சநாகேந்திர சுவாமிக்கு சிறப்பு அலகங்காரமும், அபிஷேகமும் நடைபெறும். ஆகஸ்ட் 2-ஆம் தேதி கங்கம்மா தேவிக்கும் சிறப்பு அலங்காரமும், கூழ்வார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) சுமங்கலி பெண்கள் நடத்தும் லலித சகஸ்வரநாமம், குங்கும அர்ச்சனையும், மாலை சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.