பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை!
பரமத்தி வேலூர் அருகேயுள்ள நன்செய் இடையாறில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை 5,008 பால்குட அபிஷேக விழா நடைபெற்று வருகிறது.வழக்கம்போல, நிகழாண்டு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதுவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை காலை மகா கணபதி ஹோமமும், இரவு 1,008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில், பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.வியாழக்கிழமை காலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஜேடர்பாளையம் காவிரியாற்றில் இருந்து பரிசல் மூலம் நன்செய்இடையாறுவரை பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காவிரிக் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். மாலை 5 மணிக்கு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மகா அவகந்தி யாகம், மகா தீபாரதனை நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 5,008 பால்குட அபிஷேகம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர்கள், எட்டுப்பட்டி ஊர் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.