திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!
ADDED :4417 days ago
திருப்போரூர் : திருப்போரூர் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த துரியோதனன் படுகளத்தை, ஏராளமானோர் கண்டு களித்தனர்.திருப்போரூர், திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த விழா, கடந்த மாதம் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மாலை, மகாபாரத சொற்பொழிவுடன், இரவு மகாபாரத நாடகமும் நடந்தது.நேற்று, காலை 11:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடந்தது. மாலை, தீமிதி விழாவும் நடந்தது. ஏராளமானோர் விரதம் இருந்து தீ மிதித்தனர். காலவாக்கம் சின்னம்மன் கோவில், புதுப்பாக்கம் வேண்டவராசி அம்மன் கோவில் ஆகியவற்றில், நேற்று, தீமிதி விழா நடந்தது.