சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா!
ADDED :4120 days ago
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் குருபூஜை விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் நடைபெற்ற பூஜையில், 108 சங்குகள் லிங்க வடிவில் அடுக்கப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று அதிகாலை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள 63 நாயன்மார்பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது. அடியார் பெருமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, சுந்தரமூர்த்தி நாயனார் அறக்கட்டளை சார்பில், சிவமுத்துக்குமார் தலைமையில் தேவார திருமுறை இன்னிசையுடன், வீதியுலா காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்