நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு!
ADDED :4117 days ago
நத்தத்தில் ஆடி 3-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர்.ஆடி வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தாகும். ஆடி 3-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பல்வேறு விதமான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நத்தம் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதேபோல் மீனாட்சிபுரம் அருள்மிகு காளியம்மன், அசோக்நகர் பகவதிஅம்மன் கோவில்பட்டி கைலாசநாதர் மற்றும் திருமலைக்கேணி சுப்பிரமணிசுவாமி கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன