ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் மகா சிரவண தீபம்
ADDED :4177 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் வரும் 10ம் தேதி மகா சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. விழுப்புரம் அடுத்த ப. வில்லியனூர் கனகவள்ளி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் திருவோன நட்சத்திரத்தை முன்னிட்டு, வரும் 10ம் தேதி மதியம் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு மகா சிரவண தீபம் ஏற்றப்படும்.