கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :4193 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் கருப்பழகி காத்தவராய சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா உற்சவம் கடந்த மாதம் 16ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் முடிந்தது. நேற்று முன்தினம் அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு பின் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் நீராட்டு நடந்தது. மாலையில் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கருப்பழகி, காத்தவராயன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. மாரியம்மன் கோவில் உற்சவதாரர்களை அறங்காவலர் நற்குணம் கவுரவித்தார்.