உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த முத்து மாரியம்மன் தேர் வீதியுலா!

ஆனந்த முத்து மாரியம்மன் தேர் வீதியுலா!

புதுச்சேரி: ஆடி நான்காம் வெள்ளியையொட்டி, ஆனந்த முத்து மாரியம்மன் கோவிலில் தேர் வீதியுலா நடந்தது. பிள்ளைத்தோட்டம் ஆனந்த முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு, தேர் வீதியுலா நடந்தது. விழாவில் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., பங்கேற்று, தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். இந்து அறநிலையத் துறை ஆணையர் வரதராஜன், கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !