ஏழைமாரியம்மன் கோவில் ஆடி மாத தேர் திருவிழா!
ADDED :4079 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதுõரில் உள்ள ஏழைமாரியம்மன் கோவிலில் ஆடிமாத தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 29ம் தேதி சாகை வார்த்தல், 30ம் தேதி துஜாரோகனம், தொடர்ந்து 7 நாட்கள் பல வாகனங்களில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி., தேரோட்டத்தை துவக்கி வைத்தார். அ.தி.மு.க., நிர்வாகிகள் பசுபதி, பாஸ்கர், முருகன், ஆதிலட்சுமி, காத்தவராயன், கிருஷ்ணன், சுரேஷ், கோவில் உபயதாரர்கள் லட்சுமணன், மணிமாறன், வேதகிரி, ரவி அலெக்ஸ், சவுந்தரராஜன், சத்திய நாராயணன், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.