உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்தி நகர் கோவிலில் பால் அபிஷேகம்

தட்சிணாமூர்த்தி நகர் கோவிலில் பால் அபிஷேகம்

புதுச்சேரி: கதிர்காமம் தட்சிணாமூர்த்தி நகர் புத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி பால் அபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் மாலை 4:30 மணிக்கு கலச பூஜை, விநாயகர் வழிபாடு, மகா அபிஷேகத்துடன், ஹோமம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு விசேஷ திரவியம் மற்றும் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. 8:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன், அம்மனுக்கு மகா தீபாராதனையும், கரகம் புறப்பாடும் நடந்தது. பகல் 12:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. இன்று 9ம் தேதி, மஞ்சள் நீராட்டு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு மற்றும் கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !