உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்!

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்!

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆக., 2 ல் கொடியே ற்றத்துடன் துவங்கிய திருவிழாவில், நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. தேரோட்டம் நாளை(ஆக.10)மாலை 3 மணியளவில் நடக்கிறது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஊர் பிரமுகர்கள் அழைப்பை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் ரத வீதிகள் வழியே நகரை வலம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !