செல்லியம்மன் கோயிலில் பூக்குழி விழா!
ADDED :4092 days ago
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் செல்லியம்மன் கோயிலில் 18 அடி அலகு குத்தி, பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஆக.,1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று, ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. முருகன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்க தலைவர் மாடசாமி, மீனவரணி துணை தலைவர் முருகேசன், செல்லியம்மன் கோயில் நிர்வாகக் குழு கவுரவ தலைவர் பாலகுருசாமி, தலைவர் வடமலையான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.