உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் ஸ்ரீ கிருஷ்ண உத்சவம்

மதுரையில் ஸ்ரீ கிருஷ்ண உத்சவம்

மதுரை : மதுரையில் சத்குரு சங்கீத சமாஜம், விஷ்ணு மோகன் பவுன்டேஷன் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண உத்சவம் 2014 நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிக சொற்பொழிவாளர் தாமல் ராமகிருஷ்ணன் ஸ்ரீ கிருஷ்ண ஸ்துதி தலைப்பில் பேசியதாவது: கடவுள் அவதாரங்களில் சிறப்பாக கருதப்படுவது கிருஷ்ண அவதாரம், ராமஅவதாரம். யுகங்கள், திசைகள், புருஷாத்தனங்கள், பகவான் அவதாரங்கள் நான்கு.அவதாரம், பூர்ண அவதாரம், பூர்ண புண்ணிய அவரதாரம் இவை மூன்றும் ஒவ்வொருவர் வாழ்வில் முக்கியமானவை. இந்த மூன்றில் பூர்ண புண்ணிய அவதாரம் என்பது மிகவும் உயர்வானது. கிருஷ்ணரும், ராமரும் இந்த அவதாரத்தை பெற்றவர்கள். நியாயம், தர்மத்தையும் கடைபிடிப்பதும், உபதேசம் செய்வதும் இந்த அவதாரங்களில் சிறப்பானது. இந்த அவதாரத்தை பெறுவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.கிருஷ்ணனுடைய பிறப்பே அற்புதம். பிறந்தது ஓர் இடம், வளர்ந்தது ஓர் இடம் என வாழ்க்கை அற்புதமும், அதிசயமுமான அமைந்திருந்தது. இன்றைய மருத்துவத்தின் அதியசங்கள் எல்லாம் புராணங்களில் எழுதப்பட்டிருப்பவை தான். சூரியனை வைத்து பஞ்சாங்களில் கணிக்கப்பட்டவை தான் இன்றைய விஞ்ஞானமாக உள்ளன, என்றார். முன்னதாக பாரதி மகாதேவன் இசைக் கச்சேரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !