ஐயனார் கோயில் புரவிஎடுப்பு விழா
ADDED :4092 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அணியம்பட்டி அகரத்தூர் ஐயனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. வகுத்தெழுவன் பட்டி, தலைவணங்காம்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, தேத்திப்பட்டி, அணியம்பட்டி, செருதப்பட்டி கிராமத்தினர் சிங்கம்புணரி சந்திவீரன் கூடத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். வேளார் தெருவிலிருந்து அரண்மனை புரவி, நேர்த்தி புரவிகளை 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஐயனார் கோயிலுக்கு ஏந்தி சென்றனர். பொங்கல், சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.